பராமரித்து வந்தவரை ராட் வில்லர் நாய் கடித்து குதறியதில் மூக்கு துண்டானது
பூந்தமல்லி அருகே பராமரித்து வந்தவரை ராட் வில்லர் நாய் கடித்து குதறியதில் மூக்கு துண்டானது.
பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியில் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு அதிக அளவில் கட்டுமான பொருட்கள் இருப்பதால் மர்ம நபர்கள் கட்டுமானப் பொருட்கள் திருடி செல்லாமல் இருப்பதற்காக வீட்டில் வளர்க்கப்படும் நான்கு நாய்களை அங்கு கட்டி வைத்து பாதுகாத்து பராமரித்து வந்தனர் இந்த நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் கணேஷ்(35), என்பவர் அந்த நாய்களுக்கு உணவு வைத்து பராமரித்து வந்துள்ளார்.
மாலை திடீரென பராமரித்து வந்த நாய் ஒன்று அவரது கை, கால்களை கடித்து குதறிய நிலையில் மூக்கை கடித்து துப்பியது இதில் அவரது மூக்கு ஒரு பகுதி துண்டானது இதில் காயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அந்த பகுதியில் விசாரிக்க சென்றபோது வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்று கூறப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் அந்த நாய்களை வெளியே காட்டாமல் அங்கிருந்த அறையில் வைத்து பூட்டி வைத்ததாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்களிடம் கேட்டபோது வீட்டில் வளர்க்கப்பட்டது தடை செய்யப்பட்ட ராட்வில்லர் நாய் என தெரிவித்தனர்.


