கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை நன்கொடையாக தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா
திருப்பதி ஏழுமலையானுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கிய பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா
உலகப் புகழ்பெற்ற புனித ஸ்தலமான திருப்பதி ஏழுமலையானுக்கு , பிரபல தொழிலதிபர் மற்றும் ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து கிலோ தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினார்.
இன்று காலை அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, கோயில் அதிகாரிகளிடம் இந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், கோயில் அதிகாரிகள் சஞ்சீவ் கோயங்காவுக்கு சிறப்பு மரியாதை அளித்தனர்.
நன்கொடை பெற்ற பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவர்களுக்கு வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர் பின்னர் கோயில் அதிகாரிகள் பட்டு வஸ்திரம் அணிவித்து தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.