in

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

 

செம்பட்டி அருகே, கேரளா, மூணாறு சுற்றுலா சென்ற பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.

சென்னையில் இருந்து கேரளா மூணாறு பகுதிக்கு 45 பயணிகளுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த பேருந்து இன்று காலை திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலை செம்பட்டி அடுத்த, கே.சிங்காரகோட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் ஓட்டுனர் மணிகண்டனுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், ஓட்டுநருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதனால், பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்திற்கு சென்று அந்தப் பகுதியில் குருமூர்த்தி என்பவர் வீட்டின் மீது மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக 45 பயணிகளும் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான பேருந்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து, பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

வள்ளலாரை வழிபட்ட சிலம்பரசன்

 உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை