in

கோயம்பேட்டில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் விபரீதம்

கோயம்பேட்டில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் விபரீதம்

 

 

கோயம்பேட்டில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் தூக்கு போட்டு தற்கொலை..

மதுரவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (20) இவர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகல்யா என்ற திருநங்கையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இவர் திருநங்கை அகல்யா வசித்து வரும் கோயம்பேடு பகுதியில் உள்ள வீட்டில் இருவரும் தங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அகல்யா தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மனோஜ் வீட்டிலிருந்து மின்விசிறியில் தடங்கத்தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் காலை வந்து அகல்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் இறந்த நிலையில் கிடந்த மனோஜின் உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருநங்கையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

What do you think?

ஜக்கமா சொல்றா… நல்லகாலம் பொறக்குது… நாகையில் திமுக நூதன பிரச்சாரம்

புதுச்சேரி..நள்ளிரவில் பல்கலை மாணவர்கள் மீது தடியடி