இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சிறுவன், சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்த காளகஸ்தனாபுரம் மெயின் ரோட்டில் இன்று காலை பள்ளி மாணவன் ஒருவன் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காளகஸ்தனாபுரம் ஊராட்சியை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் பிரணவ்.
10 வயது நிரம்பிய இவர் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை பள்ளி செல்வதற்காக சைக்கிளில் காற்று அடிக்க மெயின் ரோடு வழியே சென்றார், அப்பொழுது ஆக்கூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ஒரு இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்து பிரணவை மோதி சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சாலையில் விழுந்து காயமடைந்தான். சிறுவன் மீது மோதுவதற்கு சில நொடிகள் முன்பு அப்பகுதியில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக சிறுவன் அதில் முதலாவது கீழே விழுந்ததால் உயிர்த்தப்பினான்.

சாலையில் அதி வேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


