பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்
மயிலாதுறை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாஞ்சில் பாலு தலைமை வகித்தார் பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி உமாரவி கண்டன உரை ஆற்றினார். பஹல்காமில் நடத்த தீவிரவாத செயல்களை கண்டிக்கிறோம்.
அந்த தீவிரவாத செயலை கண்டிக்காத தி.மு.கவை கண்டிக்கிறோம் என்றும். பென்களை பற்றி தவறாக சித்தரித்து பேசிய பொன்முடியை கண்டித்துப்பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் பூண்டி வெங்கடேசன் உட்பட 100 க்கு மேற்பட்ட பா.ஜ.க வினர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.