in

திமுக ஆட்சி நிர்வாகத்தில் முட்டை என்பதை கூறி, முட்டைகளில் DMK என எழுதி பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்

திமுக ஆட்சி நிர்வாகத்தில் முட்டை என்பதை கூறி, முட்டைகளில் DMK என எழுதி பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்

திமுக அரசு நிர்வாகம் கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து துறைகளும், அரசு நிர்வாகமும் செயல்பாட்டில் முட்டையாக இருப்பதாக கூறி மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் கோழி முட்டைகளில் DMK என எழுதி அதனை பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் எதிர்ப்பை தெரவித்தனர்.

திமுகவின் கடந்த நான்கரையாண்டு திட்டங்களின் அவலத்தை கூறியும், திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டியும் பொதுமக்களுக்கு முட்டைகளை வழங்கி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய பாஜக நிர்வாகி முதலமைச்சர் மகளிர் உரிமைத் தொகை 5 ஆயிரம் வரவு வைத்துள்ளார், கோடைகால விடுமுறை என 2 ஆயிரம் வரவு வைத்துள்ளார் கடந்த ஆண்டு கோடைகாலம் வரவில்லையா என்றும், இது தேர்தலுக்காக மகளிர் உரிமை வரவு வைக்கப்படுகிறது.

இந்தியாவில் கடன் வாங்கிய மாநிலமாக முதல் இடமாக தமிழ்நாடு உள்ளது; அறநிலைத் துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முட்டையாகவே உள்ளது எனக்கூறி பொதுமக்களுக்கு முட்டைகள் வழங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

What do you think?

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றுறது

உரிமைத்தொகை பெறும் மகளிருக்கு இன்று 5000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து  முன்னாள் அமைச்சர் MLA பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்