in

முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயின் பிறந்தநாள் விழா 

முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயின் பிறந்தநாள் விழா

27 ஆம் ஆண்டாக கிராம மக்கள் ஒன்றிணைந்து கர்னல் ஜான் பென்னிகுயின் புகைப்படத்துடன் ஊர்வலமாக சென்று பாரம்பரிய முறையில் கொண்டாட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பாலர்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கைக் கடவுளாக போற்றி அவரது 185 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாலர்பட்டி கிராமத்தில் தொடர்ந்து இன்று 27 ஆம் ஆண்டாக அவரது பிறந்த நாள் விழாவை கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர்.

தேவராட்டம், சிறுவர்கள் சிலம்பம் சுற்றி ஆட்டம் பாட்டத்துடன் பாரம்பரிய முறைப்படி ஊர் மக்கள் ஒன்று கூடி தலையில் பொங்கல் பானை சுமந்து கொண்டு அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொங்கல் வைத்து “பொங்கலோ பொங்கல்” என குலவையிட்டு கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த கன்னல் ஜான் பென்னிகுயிக்கை கடவுளாக போற்றி அவரது பிறந்தநாள் விழாவை எங்கள் கிராமத்தில் தொடர்ந்து 27 ஆண்டுக்காக பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

What do you think?

‘ஜனநாயகன்’ படம் கோர்ட் படிக்கட்டுல நிக்குறது

மது போதையில் கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்