in

பிக்பாஸ் 9 அதிரடி: ஒரே நேரத்துல ரெண்டு ‘ரெட் கார்டு’! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


Watch – YouTube Click

பிக்பாஸ் 9 அதிரடி: ஒரே நேரத்துல ரெண்டு ‘ரெட் கார்டு’! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

விஜய் டிவினாலே ரியாலிட்டி ஷோ தான், அதுலயும் பிக்பாஸ் வந்துட்டா போதும்.. ஊரே அதைப் பத்திதான் பேசும்.

இப்போ ஓடிக்கிட்டு இருக்குற பிக்பாஸ் சீசன் 9 கிளைமாக்ஸை நெருங்கிட்டு இருக்குற இந்த நேரத்துல, யாரும் எதிர்பார்க்காத ஒரு ‘ஷாக்’ நியூஸ் வந்திருக்கு!

பொதுவா வாராவாரம் மக்கள் ஓட்டு போட்டுத்தான் ஒருத்தர் வெளியேறுவாங்க. ஆனா இப்போ விதிமுறைகளை மீறுனதுக்காக பார்வதி மற்றும் கம்ருதீன் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல ‘ரெட் கார்டு’ கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேத்திட்டாங்க.

இது பிக்பாஸ் வரலாற்றிலேயே ரொம்ப அபூர்வமான விஷயம்!

பார்வதி: எப்போவுமே போல்டா பேசுறது, மனசுல பட்டதை முகத்துல அடிச்ச மாதிரி சொல்றதுன்னு ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வச்சிருந்தாங்க.

கம்ருதீன்: இவர் கொஞ்சம் அமைதியான டைப். பிளான் பண்ணி விளையாடுறதுல கில்லாடி. இவங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல போனது “நியாயமா?”ன்னு ஒரு பெரிய விவாதமே சோஷியல் மீடியாவுல கிளம்பிருக்கு. “விதிமுறைன்னா எல்லாருக்கும் ஒண்ணுதான்”னு ஒரு தரப்பும், “பார்வதிக்கு இது அநியாயம்”னு அவரோட ரசிகர்களும் மல்லுக்கட்டிட்டு இருக்காங்க.

வீட்டை விட்டு வெளிய வந்த அப்புறம் இவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பார்த்தா, அதுதான் செம இன்ட்ரஸ்டிங்: வெளிய வந்ததில் இருந்து கம்ருதீன் ஆள் அட்ரஸே இல்லாம அமைதியா இருக்காரு. சோஷியல் மீடியாவுல ஒரு போஸ்ட் கூட போடல.

“மனசு உடைஞ்சு போயிட்டாரா?” இல்ல “சரியான நேரத்துக்காக வெயிட் பண்றாரா?”ன்னு தெரியாம ரசிகர்கள் குழப்பத்துல இருக்காங்க. ஆனா பார்வதி அப்படியே ஆப்போசிட்! இன்ஸ்டாகிராம்ல ஃபுல் ஆக்டிவா இருக்காங்க.

ரசிகர்கள் போடுற “பார்வதி தான் உண்மையான வின்னர்”, “நீங்க தான் ஸ்ட்ராங்” அப்படீங்குற போஸ்ட்டுகளைத் தொடர்ந்து ஷேர் பண்ணி தன்னோட இருப்பைக் காட்டிக்கிட்டே இருக்காங்க.

விதிமுறைகள் முக்கியமா? இல்ல ரசிகர்களின் உணர்வுகள் முக்கியமா? அப்படீங்குற விவாதம் தான் இப்போ பிக்பாஸ் ரசிகர்களோட மெயின் டாபிக்கா இருக்கு.

பினாலே (Finale) நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன அதிரடி காத்துட்டு இருக்கோ!

What do you think?

அம்மையப்பர் அறக்கட்டளை சார்பில் திருவெம்பாவை நோன்பு திருக்கல்யாணம் சுவாமி திருவீதி உலா

பாரதிராஜா மறைவா!? வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்!