நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பட்டி துரைக்கமலம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் தலைமை தாங்கி
673 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, ஜான்பீட்டர், நகர மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன்,
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தமிழரசி, உமாமகேஸ்வரி, கவுன்சிலர் இஸ்மாயில்,ஆசிரியர்கள், திமுக பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


