பந்தல்குடி கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
முதலமைச்சர் ஆய்வு செய்து – 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்த பந்தல்குடி கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள செல்லூர் கண்மாய், கடந்த ஆண்டு தண்ணீர் அதிக அளவு குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று நிலையில் சர்ச்சையாகியதை தொடர்ந்து தமிழகம் முதல்வர் நேரில் வருகை தந்து ஆய்வு செய்த பிறகு அதற்கான பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து
வைகை ஆற்றை நோக்கி செல்லும் கால்வாயாக உள்ள ( பந்தல்குடி வாய்க்கால்) பகுதியில் சிமெண்ட் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்
சுமார் 70 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த பணிகளின் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கு பெற்றனர்.

இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து தண்ணீர் தேங்காமல் செல்வதற்கான பணிகளை தொடங்க உள்ளதாக அமைச்சர் மூர்த்தி பேட்டி.


