in

மானிய விலையில் இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்கும் விழா, 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயனாளிகள்.

மானிய விலையில் இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்கும் விழா, 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயனாளிகள்.

 

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக பயனாளிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்கும் விழா. காலை 8 மணிக்கு வந்த பயனாளிகள் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த அவலம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக பயனாளிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பயன்பெறும் பயனாளிகள் காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்திற்கு வரும்படி தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூப்படுகிறது.

இதனை ஏற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயனாளிகள் காலை 8:00 மணி முதல் விழா நடைபெறும் வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் அதே நேரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டமும் நடைபெற்றதால் விழா துவங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. 10:30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட விழா மதியம் 2 மணி வரை தொடங்கப்படவில்லை.

இதனால் காலை 8 மணியில் இருந்து 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயனாளிகள் கடும் அவதி அடைந்தனர். விழா தாமதமாவது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில் உரிய நேரத்தில் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் பயனாளிகள் பாதிக்கப்பட்டனர்.எனவே இனிவரும் காலங்களிலாவது உரிய நேரத்தில் விழாவை நடத்த வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

மார்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியிடப்பட்டது

3BHK” படக்குழு..வை பாராட்டிய நடிகர் சூரி