in

முன் அறிவிப்பின்றி அகற்றப்பட்ட பேனர்கள்

முன் அறிவிப்பின்றி அகற்றப்பட்ட பேனர்கள்

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் முன் அறிவிப்பின்றி அகற்றப்பட்ட நிலையில், விசிக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் விசிக நிர்வாகி ஜப்பார் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முஸ்லிம் ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளராக இருப்பவர் ஜப்பார். இவர் கடந்த 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திண்டிவனம் நேரு வீதியில் வாழ்த்து பேனர்களை வைத்துள்ளார். இந்நிலையில் ,
இன்று போலீசார் அவரிடம் எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல் பேனர்களை அகற்றியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜப்பார் அங்கிருந்த போலீசாரிடம் மற்ற கட்சியினர் வைக்கும் பேனர்கள் நீண்ட நாட்கள் அகற்றப்படாமல் இருக்கும் நிலையில், நான் வைத்த பேனர்களை மட்டும் ஏன் எனக்கு தெரிவிக்காமல் அகற்றுகின்றீர்கள்? என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்தும் காவல் துறையால் பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில் ,
விசிசு நிர்வாகி ஜப்பார் பஜார் வீதியில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் அப்பொழுது போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் முன் அறிவிப்பின்றி அகற்றப்பட்ட நிலையில், விசிக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் விசிக நிர்வாகி ஜப்பார் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முஸ்லிம் ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளராக இருப்பவர் ஜப்பார். இவர் கடந்த 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திண்டிவனம் நேரு வீதியில் வாழ்த்து பேனர்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று போலீசார் அவரிடம் எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல் பேனர்களை அகற்றியதாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜப்பார் அங்கிருந்த போலீசாரிடம் மற்ற கட்சியினர் வைக்கும் பேனர்கள் நீண்ட நாட்கள் அகற்றப்படாமல் இருக்கும் நிலையில், நான் வைத்த பேனர்களை மட்டும் ஏன் எனக்கு தெரிவிக்காமல் அகற்றுகின்றீர்கள்? என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்தும் காவல் துறையால் பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில் ,
விசிசு நிர்வாகி ஜப்பார் பஜார் வீதியில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் அப்பொழுது போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது .

What do you think?

நெய்வேலியில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால்கோள் விழா…

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 வென்ற ராஜஸ்தான் அழகி மாணிகா விஸ்வகர்மா