in

ThugLife திரைப்படத்திற்கு தடை


Watch – YouTube Click

ThugLife திரைப்படத்திற்கு தடை

மணிரத்தினம் இயக்கிய ThugLife திரைப்படத்தில் கமலஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் கமலஹாசன் தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு கர்நாடக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கமலஹாசனின் போஸ்டர்கள் எரித்து கமலஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எச்சரித்தனர்.

இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

கமலஹாசனும் நான் தவறாக எதுவும் பேசவில்லை அதனால் மன்னிப்பும் கேட்க முடியாது என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் கர்நாடக திரைப்பட சங்கத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ThugLife திரைப்படம் கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது.

What do you think?

காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

OTT..யில் வெளியாகும் லால் சலாம்