in

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரோட்ஷோ நடத்த தடை

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரோட்ஷோ நடத்த தடை

 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரோட்ஷோ நடத்த தடை விதித்து, சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவு.

மதுரை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை கிளையில் கடந்த 10 ஆம் தேதி பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி எம் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் அனுமதி கொடுக்கிறதால் தான் இது போன்ற சம்பவம் நடக்கிறது. உரிய பாதுகாப்பு வழங்கிய பிறகு எந்த கட்சி ஆயினும் அனுமதி கொடுக்க வேண்டும் அதுவரை அனுமதி கொடுக்க கூடாது என வாதிடப்பட்டது.

பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ நடத்துவதற்கான ஏற்கனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது அதை கடைபிடித்து, எந்த கட்சி ரோட்ஷோ நடத்தினாலும் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ரோட் ஷோ நடத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.

What do you think?

 புனித பிரான்சிஸ் அசிசியா ஆலயத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது

முட்டியூரில் ஸ்ரீ பண்டரிநாதர் 113 வது ஆண்டு பஜனை மகோற்சவ விழா