”அப்போ கேப்டன்..இப்போ தளபதியா?”விஜய்யை வறுத்தெடுத்த வடிவேலு!
நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமால மட்டும் இல்ல, இப்போ அரசியல் மேடைகளையும் தன்னோட நக்கல் நையாண்டியால அதிர வச்சுட்டு இருக்காரு. சமீபத்துல நடந்த ஒரு தி.மு.க நிகழ்ச்சியில கலந்துகிட்ட ‘வைகைப்புயல்’, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை செமயா கலாய்த்துப் பேசினது இப்போ பெரிய விவாதமாகியிருக்கு.
வடிவேலு ஏற்கனவே தி.மு.க-வுக்குத் தான் என் ஆதரவுனு ஓப்பனா சொல்லிட்டு வர்றவர். ‘மாமன்னன்’ படத்துல உதயநிதி ஸ்டாலின்கூட நடிச்சதுல இருந்து, அந்த நட்பு இன்னும் ஸ்ட்ராங் ஆயிடுச்சு. 2011-ல விஜயகாந்தை எதிர்த்துப் பேசி எப்படி ஒரு புயலைக் கிளப்பினாரோ, அதே மாதிரி இப்போ விஜய்க்கு எதிரா பேசி இருக்காரு.மேடையில பேசின வடிவேலு,
“முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அந்த முடிவு இருக்கே.. அப்பா! மக்களின் பேங்க் அக்கவுண்டுக்கு ரூ.5000 போட்டதை கேட்டதும், இந்த ஆட்சி அழியணும்னு நினைக்கிறவங்களுக்கே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.
மக்கள் சந்தோஷமா இருக்குறப்போ, ஏன் சில பேரு தேவையில்லாம இதைக் குறை சொல்றாங்கன்னு தெரியல”னு முதலமைச்சருக்கு ஐஸ் வைத்தாரு.அடுத்ததா, த.வெ.க தலைவர் விஜய்யை டார்கெட் பண்ணி வடிவேலு பேசினது தான் ஹைலைட். “ஸ்டாலினை சாதாரண ஆளா நினைக்காதீங்க. மேடையில ஏறிப் பேசுறது எவன் வேணும்னாலும் செய்யலாம் (விஜய்யைச் சொல்றாரா?). ஆனா, காரியத்துல இறங்கிச் செயல்படுறது நம்ம தி.மு.க தான். எதுக்கெடுத்தாலும் ‘தி.மு.க-வை அழிப்போம்’னு சொல்றாங்க.
டேய்.. அப்படிச் சொன்னவனை இப்போ ஆளையே காணோம்! எங்க இருக்காங்கன்னே தெரியல. அதைப்பத்திப் பேசுனா சிக்கலாகிடும், நான் ரொம்ப டீப்பா போக விரும்பல”னு வடிவேலு தன்னோட பாணியில நக்கல் அடிச்சாரு.
2026 தேர்தலைப் பத்திப் பேசின வடிவேலு, “வர்ற எலெக்ஷன்ல தி.மு.க தான் மறுபடியும் ஜெயிக்கும். 200-க்கும் மேல தொகுதிகள்ல ஜெயிச்சு ஸ்டாலின் தான் மறுபடியும் சி.எம் ஆகப்போறாரு.
மக்கள் அதை முடிவு பண்ணிட்டாங்க. ஆனா நாம சும்மா இருக்காம, தொடர்ந்து ஹார்ட் ஒர்க் பண்ணணும்”னு தொண்டர்களை உசுப்பேத்திப் பேசினாரு.
விஜய்யின் அரசியல் வருகைக்கும், த.வெ.க-வுக்கும் எதிரா வடிவேலு இப்படிப் பேசினது இப்போ சோசியல் மீடியாவுல பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கு!


