பெண் குழந்தைகள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி
நாட்டின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது குறித்து தேசியக் கொடியுடன் சிலம்பம் சுற்றி பேரணியாக வந்த சிறுவர்கள் வந்தே மாதரம் என பிஞ்சு குழந்தைகளின் முழக்கம் பார்ப்போரை கண் கவர செய்தது.
இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 79 மாணவர்கள் சிலம்பம் ஆடும் குச்சியில் தேசியக் கொடியினை கட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் சுற்றினர்.
பின்னர் காந்தி காந்தி சிலையிலிருந்து தெற்கு ரத வீதி வரை குழந்தைகள் பேரணியாக சென்றனர் பேரணியின் போது வந்து மாதிரம் என குழந்தைகளின் பிஞ்சு வார்த்தைகளால் பொதுமக்களை கண் கவர செய்தது.

முன்னதாக இந்த பேரணியை சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


