ஆவணிப்பூர் ஸ்ரீ துர்க்கை காளியம்மன் ஆலய கூழ்வார்த்தல் மற்றும் செடல் திருவிழா
ஆவணிப்பூர் ஸ்ரீ துர்க்கை காளியம்மன் ஆலய கூழ்வார்த்தல் மற்றும் செடல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆவணிப்பூர் கிராமம் ஸ்ரீ துர்கை காளியம்மனுக்கு ஆடி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை கூழ்வார்த்தல் மற்றும் செடல் திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ துர்க்கை காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து முதலில் பூங்கரங்கள் மற்றும் சக்தி கரகம் கிராம வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் சடல் குத்திக்கொண்டு ஆட்டோ டாட்டா ஏஸ் போன்ற பல்வேறு விதமான வாகனங்களை இழுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

மேலும் சிறிய வடிவிலான தேரின் முன்பு அங்கப் பிதர்சனம் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


