வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆவணி மாத ஜோதி தரிசனம்
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆவணி மாத ஜோதி தரிசனம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசன மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமான இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஆவணி மாத பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு சத்திய ஞான சபை வளாகத்தில் ஆறு திரைகளை நீக்கி ஆவணி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்ற வள்ளலாரின் தாரக மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து வள்ளலார் சபை வளாகத்தில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழகம் அல்லாத பல்வேறு பகுதியைச் சேர்ந்த வள்ளலார் பக்தர்கள் சன்மார்க்க அண்பர்கள் மற்றும், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


