மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
பைக் டாக்ஸி செயலியை தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்..
மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பாக பாதுகாப்பற்ற பைக் டேக்ஸி செயலியை தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பைக் டாக்ஸி செயலியால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஆட்டோ ஓட்டுனரின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டம் என்ன ஆனது? என்ற கோஷங்கள் எழுப்பி பதாகைகளுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இருசக்கர வாகனங்கள் வெள்ளை நம்பர் பிளேட்டுகளுடன் வாடகைக்கு விடுவதாகவும், இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


