பழைய சொரத்தூர் கிராமம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலய “அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா”
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பழைய சொரத்தூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபூஜையுடன் இனிதே தொடங்கியது.
தொடர்ந்து நாடி சந்தானம் யாத்ராதானம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் தேவிய ஓமம் லட்சுமி ஓமம், நேத்ரா தானம் தத்துவார்ச்சனை தொடர்ந்து நடைபெற்று வந்தன.

மேலும் இரண்டாம் கால யாக பூஜையில் பல்வேறு வகையான திரவிய பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் பழ வகைகள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்களுக்கு பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது.
மேலும் பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோயிலை வலம் வந்து மூலவர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய கருவறை விமானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் கருவறை விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் சொல்லி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர் மற்றும் பரிவார மூடிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவர்கள் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு மகா கும்பாபிஷேகம் என்னும் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மூலவர்கள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகைக்கு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


