திண்டிவனம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவாங்கர் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ துர்க்கை குரு தட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மங்கல இசை உடன் ஆரம்பமாய் என்ன தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
மேலும் ரக்ஷா பந்தன், நாடி சந்தானம், தத்துவார்சன்னை, சன்னவாதி ஹோமம், தொடர்ந்து யாகசாலையில் பல்வேறு வகையான திரவியங்கள் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் செலுத்தப்பட்டன.
மேலும் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்களுக்கு பூர்ணாஹூதி செலுத்தி பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கடம் புறப்பாடு ஆளையே வலம் வந்து காலை 8 மணி முதல் ஒன்பது மணிக்குள் மிதுன லக்னத்தில் சௌடேஸ்வரி அம்மன் கருவறை விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஒன்பது மணி அளவில் மூலவர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.