in

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.

 

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வடக்குமாங்குடி
ஸ்ரீ அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்குமாங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைப்பெற்று யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்கயிலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவின் ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், வடக்குமாங்குடி‌ கிராமவாசிகள், நாட்டாமைகள் ஆகியோர் செய்திருந்தனர்.

What do you think?

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

குபேரா … வசூலில் குபேரனாவாரா… குபேரா movie Review