ஆஷாட நவராத்திரி விழா 4 ஆம் நாள் சந்தனம் அலங்காரம்
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 4 ஆம் நாளான சந்தனம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை,.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன் கடந்த 25 ஆம் தேதி சிறப்பாக துவங்கிய நிலையில் 4 ஆம் நாளான சந்தனம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.


