மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது.இக்கோயிலில் திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் கொண்டாடப்பட்டது.
சதய நட்சத்திரத்தில் தொடங்கிய விழா நிறைவு நாளாக திருவாதிரை திருநாளான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜர் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

திருவெம்பாவையின் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு பால், சந்தனம், விபூதி,பன்னீர்,இளநீர், நார்த்தை உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோயிலுக்குள் பசுமாடு யானை ஆகியன அழைத்து வரப்பட்டு கோபூஜை,கஜபூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

