in

 ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா அர்ஜுனன் தபசு

 ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா அர்ஜுனன் தபசு

 

செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவின் 7-ம் நாள் அர்ஜுனன் தபசு மரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர்  கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவானது கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

விழாவின் 7-ம் நாள் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அர்ஜுனன் தனது எதிரிகளை கொல்ல பகலி என்றும் சொல்லக் கூடிய வில்வற்றாக அம்பை சிவனிடத்தில் வாங்குவதற்காக 40 அடி உயர தபசு மரத்தில் தவம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் மீது வில்வ இலையும், எலுமிச்சை பழங்களும் வீசப்பட்டன.

திருமணம் ஆகாத பெண்களுக்கு மஞ்சள், குங்குமம். தாலி சரடுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இக்கோவிலில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் குழந்தை பாக்கியம் வேண்டி எலுமிச்சை பழங்கள் பெற்று குழந்தை பாக்கியம் அடைந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தவசு மரத்தில் தொட்டில் கட்டி வணங்கினர்.

பெருங்காப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாவின் உபயதாரர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

What do you think?

பறவைகளை மொத்தமாகப் பார்க்கும் இடமாக வடுவூர் பறவைகள் சரணாலயம்

 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் திருவிழா