அறிவு?.”என்னை பிளாக் பண்ணிட்டீங்க!” சந்தோஷ் நாராயணன் கிளப்பிய புது சர்ச்சை!
கொரோனா டைம்ல ரிலீஸ் ஆகி, சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் ஆட வச்ச பாட்டு தான் ‘என்ஜாய் எஞ்சாமி’. ஆனா, அந்தப் பாட்டுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சண்டை ஓடிக்கிட்டு இருக்குறது தான் இப்போ சோசியல் மீடியாவோட ஹாட் டாபிக்.பாடல் வெளியாகி 5 வருஷம் ஆனதையொட்டி அறிவு ஒரு எமோஷனல் போஸ்ட் போட்டிருக்காரு. அதுல அவர் சொன்னது இதுதான்: “இந்தப் பாட்டோட மியூசிக் வந்தப்போ, என் சொந்த வாழ்க்கையையும் என் முன்னோர்களோட கதையையும் வச்சு தான் வரிகள் எழுதினேன்.
ஆனா பாட்டு ரிலீஸ் ஆனப்போ என்னை வெறும் ‘featuring artist’-ஆ மட்டும் தான் காட்டுனாங்க. 5 வருஷம் ஆகியும் எனக்கு வர வேண்டிய ராயல்டியோ, அங்கீகாரமோ கிடைக்கல.
என்னை மாதிரி இன்டிபென்டன்ட் மியூசிஷியன்ஸ் எல்லாரும் உஷாரா இருங்க, உங்க படைப்புக்கான உரிமையைச் சரியா கேட்டு வாங்குங்க”னு ஆதங்கத்தோடு சொல்லிருக்காரு.அறிவோட போஸ்ட்டைப் பார்த்ததும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சும்மா இல்லாம, கமெண்ட் செக்ஷன்லயே வந்து இறங்கிட்டாரு.
“நீங்க சொல்றது எல்லாம் உங்க கற்பனை தான். சட்டப்படியும், டெக்னிக்கலாவும் இதுல உண்டையே இல்லை. தைரியம் இருந்தா என்கூட நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்னை எல்லா இடத்துலயும் பிளாக் பண்ணி வச்சுட்டு இப்படிப் பேசுறது சரியில்லை”னு செம காட்டமா பதில் கொடுத்திருக்காரு.சந்தோஷ் நாராயணன் .
இப்படிச் சொன்னதும் அறிவு விடல. “நான் எத்தனையோ தடவை உங்க வீட்டுக்கே வந்து நேர்ல பேச முயற்சி பண்ணினேன். நமக்ககுள்ள இருக்குற இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நான் தான் ஓடி வந்தேன். இதையெல்லாம் சோசியல் மீடியாவுல விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை”னு பதிலுக்குப் பதில் சொல்லியிருக்காரு. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பாட்டுக்கு பின்னாடி, இப்படி ரெண்டு பெரிய திறமைசாலிகள் அடிச்சுக்கிறது இப்போ கோலிவுட்ல பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.


