அதிரடி முடிவு எடுத்த அனுஷ்கா ஷெட்டி
சிம்பிள் பியூட்டி அனுஷ்கா ஷெட்டி...யின் முதல் திரைப்படமே அவருக்கு ஹிமாலய வெற்றியை தந்தது அந்த வெற்றிக்கு மேலும் பலம் கொடுத்தது பாகுபலி.
பாகுபலி வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.
நடித்த படங்களும் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்ததால். புதுசா யோசிகிறதா நினைச்சு ரசிகர்களை Impress பண்ண வேண்டும் என்ற ஆசையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை கூட்டியதால் படமும் பிளாப்…. பட வாய்ப்புகளும் போச்சு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படம் மூலம் Re..என்ட்ரி கொடுத்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தாலும் வாய்ப்புகள் கதவை தட்டவில்லை.
வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று நம்பிக்கையுடன் Ghaati …யில் நடித்தார்.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான Ghaati. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாததால் விமர்சனத்தை பார்த்து மணம் உடைந்த அனுஷ்கா அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.
அதாவது அனுஷ்கா சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அனுஷ்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மீண்டும் அவருக்கு நடிக்கும் எண்ணம் இல்லையா என்று வருத்ததுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
