in

 உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

 உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

 

கடலூர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

*கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் கடலூர் கடற்கரை சாலையில் செயல்பட்டு வருகிறது.

இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 மாவட்ட அதிகாரிகளையும் வரவழைத்து கூட்டம் நடத்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் பணம் வசூல் செய்யப்போவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கடலூரில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கூட்டம் முடிந்ததும் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலீசார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திடீரென சென்று அலுவலக அறைகளில் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நடந்த இந்த சோதனையின் முடிவில் அலுவலக கூட்ட அரங்கில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பணத்திற்கான ஆவணத்தை, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்ட போது, அதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகளிடம், கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 960 லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

விமானத்தில் கல்வி சுற்றுலா சென்ற ஏழை மாணவர்கள்…