in

பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா தேர் பவனி

பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா தேர் பவனி

 

வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை வீரமா முனிவரால் கட்டப்பட்டதாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர் பவனி இன்று இரவு நடைபெற்றது. முன்னதாக கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தேர்வினை புனிதம் செய்து வைத்து தொடங்கி வைத்தார்.

 

வாண வேடிக்கையுடன் நடைபெற்ற தேர் திருவிழாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க – மரியே வாழ்க என வழிபாடு நடத்தினர்.

What do you think?

வைரவன் கோவில் கிராமத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி பெருவிழா

மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்