in

சிதம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா

சிதம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா

 

சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்பு.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சிதம்பரம் நகரில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேலவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் அனைவரும் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதையடுத்து அண்ணாமலைநகருக்கு சென்ற அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அங்கு மண் ரோடு பகுதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

What do you think?

நாகை நவநீதகிருஷ்ணன் கோவில் தேரோட்டம்

ஶ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா