in

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. வருகிற 25ஆம் தேதி ஊழியர்கள் சங்க தேர்தலை நடத்த முடிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கடந்த 5 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரான ரவி தலைமையில் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

ஊழியர் சங்க பதிவு எண்ணை மீட்டெடுத்து, தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக கூட்டப்பட்ட இந்த பொதுக்குழுவில் கூட்டு நடவடிக்கை குழுவின் முன்னாள் நிர்வாகிகள் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பதிவை மீட்டெடுப்பது குறித்தும். ஊழியர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன் முடிவில் ஊழியர்களின் நலனுக்காக ஊழியர்கள் சங்கத் தேர்தலை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ரவி, சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெறாததால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். 2 சதவீத அகவிலைப்படியை பெறுவதற்கு கூட நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஊழியர் சங்கத்தின் பதிவை மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் வருகிற 25 ஆம் தேதி மாலை ஊழியர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி குரல் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் ஊழியர்களின் நலன்களுக்காக போராடுவார்கள். ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்ற முயற்சிக்கு முடிவை பொதுக்குழு கடுமையாக எதிர்ப்பதாக கூறினார்.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ரத்ன கர்ப மகா கணபதி மகா கும்பாபிஷேகம்

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா