in

புதுச்சேரி அருள்மிகு திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ அன்னம் மற்றும் 55 கிலோ நாட்டு காய்கறிகள் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது

புதுச்சேரி அருள்மிகு திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் 250 கிலோ அன்னம் மற்றும் 55 கிலோ நாட்டு காய்கறிகள் கொண்டு கங்கைவராக நதீஸ்வரருக்கு சாற்றப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

காசிக்கு வீசபெற்று புதுச்சேரி சங்கராபரணி ஆற்றங்ங்கரையில் அமைந்திருக்கும் திருக்காஞ்சி அருள்மிகு கங்கைவராக நதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்தால் அளப்பரிய நன்மைகள் உண்டாகி பாவங்கள் தொலைந்து சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி ஐப்பசி மாத அசுவினி நட்சத்திரத்தில் கங்கைவராக நதீஸ்வரருக்கு நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் 250 கிலோ அன்னம் மற்றும் சுரக்காய், பீர்க்கங்காய், வாழக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், உள்ளிடட 55 கிலோ நாட்டுக்காய்கறிகள் கொணடு கங்கை வராக நதீஸ்வரருக்கு சாற்றப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பௌர்ணமி அபிஷேகம் கிரிவலம் மற்றும் ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

இது குறித்து கோவில் குருக்கள் கூறும்போது…

சிவபெருமானுக்கு சாட்டப்படும் அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அந்த பிரசாதத்தை சாப்பிடும்போது உடம்பில் உள்ள சகல வியாதிகளும் நீங்க விருது என்றும் குழந்தை பெரும் பாக்கியம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

What do you think?

புதுச்சேரி சித்தானந்த கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம்

பாஜக கூட்டணியை விட்டு முதலமைச்சர் ரங்கசாமி வெளியேறினால் அடுத்த நிமிடம் திகார் சிறையில் இருப்பார்