ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு புதுச்சேரி சித்தானந்த கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் பிரசித்திபெற்ற கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சிவலிங்கத்தை அன்னத்தை கொண்டு அலங்கரித்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக ஸ்வாமிக்கு படையல் இட்ட அன்னம் வழங்கப்பட்டது.
இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் வரிசையாக நடைபெற்றது.

