அணிலாடி தூய இருதய ஆண்டவர் ஆலய 133-வது ஆண்டுப் பெருவிழா தேர் பவனி
செஞ்சி அருகே அணிலாடி தூய இருதய ஆண்டவர் ஆலய 133-வது ஆண்டுப் பெருவிழா தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அணிலாடி கிராமத்தில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் ஆலய பெருவிழாவின் 133-வது ஆண்டு தேர் பவனி வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஆலய திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று ஆலய வளாகத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னைமரி, குழந்தை இயேசு ஆகியோருக்கு மாலை அணிவித்து பங்கு தந்தைகளின் சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு தொடங்கிய தேர் பவனி மேளம் தாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட குதிரை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றுடன் வீதி வீதியாக இரவு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அப்பொழுது திருச்சபை மக்கள் வீதிகளில் வண்ணக் கோலங்கள் போட்டும், பவானியாக சென்ற தேரில் மெழுகுவத்தி ஏத்தியும் அன்னை மரியை வணங்கினர்.
இந்த தேர் பவனியில் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…..


