in

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சி ஐ டி யு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சிஐடியு சார்பாக மாவட்ட தலைவர் பேபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து THR,பேஸ் கேப்சர் உள்ளிட்ட திட்டங்களை திரும்ப பெறக் கோரியும், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை பணியமர்த்திட வலியுறுத்தி, ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆழ்படுத்தும் அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

பழனியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு சோதனை

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினர்