in

 வடலூர் பகுதி மக்களிடையே அன்புமணி இராமதாஸ் கேள்வி

 வடலூர் பகுதி மக்களிடையே அன்புமணி இராமதாஸ் கேள்வி

 

திமுக அரசு வள்ளலார் பெயரில் பண்ணாட்டு மையம் அமைத்தால் பெருமைதான அது என வடலூர் பகுதி மக்களிடையே அன்புமணி இராமதாஸ் கேள்வி…

அன்புமணி இராமதாஸ் கேள்விக்கு சட்டென பதில் கொடுத்த வடலூர் பகுதி பொது மக்கள்…

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பெயரில் கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் மற்றும் பொதுகூட்டங்களில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே வடலூர் சத்திய ஞான சபையில் தரிசனம் மேற்கொள்ள வந்த பாமக தலைவர் அன்புமணியை வடலூர் சாத்திய ஞான சபைக்கு இடம் கொடுத்த பார்வதிபுரம் கிராம பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க கூடாது என முறையிட்டனர்.

அப்பொழுது அன்புமணி பார்வதிபுரம் கிராம பொதுமக்களிடையே திமுக அரசு வள்ளலார் பெயரில் பண்ணாட்டு மையம் அமைத்தால் பெருமைதான அது என கேள்வி எழுப்பினார்.

அன்புமணியின் கேள்விக்கு சட்டென அந்த கிராம பொது மக்கள் கூறும் பொழுது எங்களுக்கு அது பெருமைதான் ஆனால் வள்ளலார் சர்வதேச மையத்தினை பெருவெளியில் அமைக்காமல் அதற்கு உண்டான வேற இடங்களில் அமைக்க வேண்டும் என கூறினர்.

மேலும் சர்வதேச மையம் அமைப்பதற்காக பெருவெளியில் கட்டுமான பணிகளுக்காக இரும்பு ஷீட்கள் அமைந்துள்ளதால் அந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், தங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள், பெண்கள் அவ்வழியே வர அச்சமாக இருப்பதாகவும், அவற்றினை அகற்ற சொல்லுங்கள் எனவும்
அன்புமணி இராமதாஸ் அவர்களிடம் பார்வதிபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பின்னர் அன்புமணி சத்திய ஞான சபையில் பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

What do you think?

பரமக்குடி அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம்

 10 நாட்கள் திருவிழாவில் 750 டன் குப்பை