பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க விழா நலத்திட்ட உதவி வழங்கிய அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க விழாவை ஒட்டி கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவி வழங்கி இனிப்புகளையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் வழங்கினார்……….
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள பாமக கட்சி கொடியினை ஏற்றி வைத்து கிராமப் பொதுமக்களை சந்தித்து இனிப்புகளையும் வழங்கினார்.
என்னைத் தொடர்ந்து கோவிந்தவாடி அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா பாக்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆசீர்வாதம் வழங்கி பின்னர் அங்கே ஏராளமான மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், மாவட்டத் தலைவர் உமாபதி, காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் ,. அமைப்புச் செயலாளர் வரதராஜன் , மாவட்ட துணை செயலாளர் தர்மராஜ்,ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஏழுமலை, காலூர் ஷங்கர்,ஒன்றிய தலைவர் லோகு ,பரந்தூர் சிவா, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கா. சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் சா.தீனதயலன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


