சாலையில் 100 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டிய தனிநபர்
லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டிய தனிநபர்……
ஊராட்சி செயலாளர் துணையுடன் நிலத்தை அளக்க வந்தாலும் தடுத்து நிறுத்தும் தனிநபர்…..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் பட்டியந்தல் கிராமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டி தனிநபர் ஆராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் பட்டியந்தல் கிராமத்தில் 450க்ககும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம்.
இந்நிலையில் தென்மகாதேவமங்கலம் பகுதியில் உள்ள பர்வத மலை கோவிலில் வருடா வருடம் மார்கழி மாத பிறப்பையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 24 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மார்கழி மாதம் பிறப்பு வரும் 16ம் தேதி வர உள்ளது. இதனை மார்கழி மாத பிறப்பையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பர்வத மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து 24 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொள்ள உள்ளனர்.
இதனால் பக்தர்கள் கிரிவலம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர், நில அளவை துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆகியோர் பட்டியந்தல் கிராமத்தில் பணியில் ஈடுபட்ட போது அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்ற தனிநபர் நிலத்தை அளவீடு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தனிநபர் ஒருவர் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அராஜக போக்கில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக அவரது உறவினரான ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உதவியுடன் நிலையத்தை அளக்கவிடாமல் தடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு நிலத்தை அளவீடு செய்து பக்தர்கள் கிரிவலம் செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

