தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து கறிக்கோழி உற்பத்திக்கு கூலி உயர்வு கேட்டு கறிக்கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் விவசாயிகளிடம் காசோலை மற்றும் பாண்டு பேப்பர் மூலம் ஒப்பந்தம் எழுதி பெற்றுக் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கேட்ட கூலித்தொகையை வழங்காததால் விவசாயிகள் ஒன்றிணைந்து கோழி குஞ்சுகளை இறக்க வேண்டாம் என்று முடிவு செய்து .
கறிக்கோழி உற்பத்திக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை முடிந்த பின்பு குஞ்சுகளை இறக்கி தொழில் செய்யலாம் என்று தெரிவித்தும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வந்த நிலையில்.
ஜனவரி 1 முதல் 13 நாட்களுக்கு மேலாக கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் கறிக்கோழி குஞ்சுகள் இறந்து விட்டதாகவும் பொது சொத்து சேதாரம் ஏற்பட்டதாகவும் பல்வேறு பொய்களை சொல்லி காவல்துறையிடம் பொய் புகார் அளித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமியை கைது செய்ததை கண்டித்தும் கறிக்கோழிக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 20 உயர்த்தி வழங்கவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் சீனி ராஜ் அவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


