in

நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை விழா

நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை விழா

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை விழா….. திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இக்கோவில் கயிலாயத்திற்கு இணையான தலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை நிறம் மாறும் சுயம்பு லிங்கம். அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம். திருநாவுக்கரசருக்கு திருவடி தீட்சை அருளிய தலம். குந்திதேவி சாப விமோசனம் பெற்ற தலம்.

அமர்நீதி நாயனாருக்கு முக்தி கொடுத்த தலம். திருமண பரிகார தலம். இக்கோவிலில் அஷ்டபுஜ காளியம்மன் சிறப்புடையது. இந்த திருநல்லூர் மாட கோயிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது.

இவ்விழாவில் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அமர்நீதி நாயனார் குருபூஜை நிகழ்ச்சியில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ் குருக்கள், ஆதின புலவர் ரமேஷ்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.

What do you think?

தஞ்சாவூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 

 “ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்ட இளைஞரின் உடல்