அலவந்திபுரம் ராஜகாளியம்மன் ஆலயத்தில் திருநடன வீதி உலா
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அலவந்திபுரம் ராஜகாளியம்மன் ஆலயத்தில் திருநடன வீதிஉலா…..
திரளான பக்தர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலவந்திபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலய திரு நடன வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அது சமயம் கோவிலில் இருந்து அம்மன் திருநடனம் புறப்பட்டு அலவந்திபுரம் கிராமத்தில் திருநடனமாடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் காளி எழுந்தருளி பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
அலவந்திபுரம் கிராம நாட்டாமைகள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.