ஆலியா நடிக்கும் புது சீரியல் ஆரம்பம்
விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆலியா சஞ்சீவ்..வுடன் இணைந்து ராஜா ராணி சீரியலில் நடித்தார்.
இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருகிறார்.
ஆலியா சன் டிவி..யில் இனியா என்ற தொடரில் நடித்தவர்.
அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்படும் சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.
பூஜையுடன் நேற்று தொடங்கப்பட்ட சீரியலின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புதிய தொடரில் புதிய கதை ஆரம்பம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த தொடரில் ஆலியாவுடன் கமலேஷ், லதாராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.