Race….இல் அஜீத் ஒட்டிய கார் விபத்துக்குள்ளானது
ஐரோப்பியாவில் நடைபெற்று வரும் GT4 கார்ப்பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.
அவர் ஒட்டிய காரின் டயர் திடீரென்று வெடித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.
அதன் பிறகு இத்தாலியில் நடைபெற்ற மிச்லின் முகெல்லோ கார்பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
இந்த வாரம் நெதர்லாந்தில் உள்ள ஜான்ட்வோர்ட் சர்க்யூட்டில் அஜித் குமார் தனது அணியின் சார்பாக ரேசிங் பந்தயத்தில் பங்கேற்டார்.
இப்பந்தயம் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற GT4 ஐரோப்பிய தொடரின் Zandvoort சுற்றில் அஜித் 6வது சுற்றில் தலா இரண்டு ஓட்டுநர்களைக் கொண்ட அணிகளுடன் மோதினார்.
இரண்டாவது சுற்றில் ’நேற்று அஜித் போர்ஷியா அணி சார்பாக பங்கேற்றார். ரேசின் போது அஜித் ஓட்டிய காரின் முன்பக்க டயர் வெடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டயர் வெடித்தவுடன் அஜித் காரை விட்டு வெளியேறியதால் விபத்து ஏற்படாமல் தப்பித்தார் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.