in

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையில் பீடத்தையும் கல்வெட்டையும் சேதப்படுத்தி அண்ணா சிலையை திருடி சென்ற நபர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

திருவண்ணாமலை நகரில் கடந்த 1969ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவிற்காக திருவுருவ சிலை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சிலையை புணரமைக்கும் பணிக்காக கடந்த 25ம் தேதி திமுகவினர் அகற்றினர். இந்நிலையில் பேரறிஞர் அண்ணா சிலையின் பீடத்தையும் கல்வெட்டையும் சேதப்படுத்தி அண்ணா சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் மீது அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிஞர் அண்ணா சிலையை அகற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை நகரத்தில் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சிலையை அப்புறப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக அண்ணா சிலையை அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

What do you think?

சிதம்பரம் நான்கு சந்நிதி சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

500 பனை விதை நட்டு மாணவர்கள் அசத்தல்