பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக வேளாண்மை உழவர்நலத் துறையின், “உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டம்” எனும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிள்ளைபாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன் தலைமையில்
உழவரைத்தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் ஸ்ரீபெரும்புதூர் வேளாண்மை அலுவலர் விண்ணரசி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும், இதனால் விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுவர் என்பன குறித்து எடுத்துரைத்து, விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் இம்முகாமில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அதிகாரியிடம் வழங்கினார்கள்
இதேபோன்று புத்தகரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் தலைமையில் தோட்டக்கலை துணை இயக்குனர் லட்சுமி முன்னிலையில் வேளாண் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிள்ளைப்பாக்கம் துணை தலைவர் வெங்கடேசன், புத்தகரம் துணைத் தலைவர் ராஜ்குமார், வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் பரந்தாமன், கால்நடைத்துறை பிரசாத், உதவி விதை அலுவலர் கார்த்திகேயன், உதவி தோட்டக்கலை அலுவலர் ராம்குமார், உதவி வேளாண்மை அலுவலர் லோகு, வேளாண்மை துறை வட்டார தொழில்நுட்ப மேலாளர் புவனா, உதவி தொழில் நுட்ப வல்லுனர் கார்த்திகேயன், பயிர் அறுவடை பரிசோதனையாளர் அபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.