திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா
திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழாவில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழாவை முன்னிட்டு திண்டிவனம் தீர்த்தகுளம் சென்று பூங்கரகம் ஜோடித்து விரதம் இருந்த பக்தர்களுடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர்.
தொடர்ந்து சக்தி கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தீ மிதித்திடலை வந்து அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு மடி சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் சக்தி கரகம் முதலில் தீ குண்டத்தில் இறங்க தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்.
தொடர்ந்து விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குள்ளத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்ட ஆயிரக்கணக்கான கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.