ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்
தமிழ் நடிகை தன்யா ரவிச்சந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுடனான தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்.
லிப்லாக் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, ” ஒரு முத்தம், ஒரு வாக்குறுதி, “எப்போதும் மற்றும் என்றென்றும்”” என்று எழுதினார்.
கௌதம் ஜார்ஜும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைபடத்தை பகிர்ந்துள்ளார். கௌதம் ஜார்ஜ் முன்பு அன்னபெல் சேதுபதி மற்றும் பூதத்தம் பாஸ்கர் நாராயணா போன்ற படங்கலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி முக்கிய வேடங்களில் நடிக்கும் பென்ஸ் படத்திலும் பணியாற்றி வருகிறார்.
மலேசிய தமிழ் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா 2016 ஆம் ஆண்டு பல்லே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு ராஜா விக்ரமார்காவுடன் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.


