நடிகை பெருமாயி பாட்டி காலமானார்
மூத்த நடிகை பெருமாயி பாட்டி நேற்று காலமானார் .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அன்னம்பாரி பட்டியை சேர்ந்த பெருமாயி..இக்கு 73 வயதாகிறது.
பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்கிற சீரியலின் மூலம் பிரபலமானவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் .
சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவை, விஜய் உடன் வில்லு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் கடைசியாக நடித்தவர் உடல்நிலை குறைவு காரணமாக நடிப்பில் இருந்து விலகி இருந்தவர் என்று நேற்று திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மறைந்தார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.


