மறைந்த நா முத்துக்குமாரின் குடும்பத்திற்கு பிளாட் மற்றும் காசோலை கொடுத்து கௌரவித்த நடிகர்கள்
உதவி இயக்குனராக இருந்து பாடல் ஆசிரியராக மாறியவர் நா முத்துக்குமார்.
நா முத்துக்குமார் பாடலாசிரியர் மட்டும் அல்ல பின்நாளில் எழுத்தாளராகவும் மாறினார். இவர் 60 படங்களுக்கு மேல் பாடல் எழுதியுள்ளார்.
நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் உட்பட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார். இவர் சீமான் இயக்கிய வீரநடை படத்தில் முதன் முதலாக பாடல் ஆசிரியராக அறிமுகமானார்.
தமிழில் சிறந்த பாடலாசிரியருக்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றார்.
1000க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பாடலாசிரியர், ஆகஸ்ட் 14, 2016 அன்று மஞ்சள் காமாலை காரணமாக 41 வயதில் காலமானார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர் இறந்து 9 வருடம் கடந்துவிட்டது.
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படைப்புகள் மற்றும் மரபுகளை கௌரவிக்கும் வகையில், சமீபத்தில் சென்னையில் ‘ஆனந்த யாழை’ என்ற இசை நிகழ்வு, நா. முத்துக்குமாரின் படைப்புகளை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நா முத்துக்குமாரின் குழந்தைகளின் கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். அந் நிகழ்ச்சியில் அவரின் குடும்பத்தினருக்கு 80 லட்சம் மதிப்புள்ள பிளாட் கொடுக்கபட்டது, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் நடிகர் சிவகுமார் வழங்கினார்.


